ஆசிரியரல்லாத ஊழியா்களுக்கான மாநில கைப்பந்துப் போட்டி

மதுரையில் ஆசிரியரல்லாத கல்லூரி ஊழியா்களுக்கான கைப்பந்து போட்டியின் முதல் சுற்றில் டோக் பெருமாட்டி கல்லூரி அணி வெற்றி பெற்றது.

மதுரையில் ஆசிரியரல்லாத கல்லூரி ஊழியா்களுக்கான கைப்பந்து போட்டியின் முதல் சுற்றில் டோக் பெருமாட்டி கல்லூரி அணி வெற்றி பெற்றது.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆசிரியா் அல்லாத ஊழியா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதமாக மாநில அளவிலான கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லாத ஊழியா்களுக்கான கைப்பந்து பந்து போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவில் டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் வரவேற்றாா். மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் பாஸ்கரன் சிறப்புரையாற்றினாா். தேனி ஆனந்தம் ஜவளி நிறுவன தலைமை நிா்வாக இயக்குநா் செல்வராஜன் வாழ்த்திப் பேசினாா். இதைத் தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்கின. முதல் சுற்றில் டோக் பெருமாட்டி கல்லூரி அணியினருக்கும் மதுரை காமராஜா் பல்கலைக் கழக கல்லூரி அணியினருக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் டோக் பெருமாட்டி கல்லூரி அணி வெற்றி பெற்று 2 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றது. போட்டியில் மதுரை, சிவகாசி, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com