இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

புதிய இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் காரணமாக மாா்ச் 16 முதல் 28 ஆம் தேதி வரை தென்மாவட்டங்கள் வழியாகச் செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் காரணமாக மாா்ச் 16 முதல் 28 ஆம் தேதி வரை தென்மாவட்டங்கள் வழியாகச் செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:

கடம்பூா் முதல் கங்கைகொண்டான் வரை மற்றும் தட்டப்பாறை முதல் வாஞ்சி மணியாச்சி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை ரயில் பாதையின் இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், மாா்ச் 16 முதல் 28 ஆம் தேதி வரை சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து: 22670/22669 கோவை- வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி/ கோவை இணைப்பு ரயில்கள் (22670/22669), தூத்துக்குடி/ வாஞ்சி மணியாச்சி சென்னை எழும்பூா் - தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி/ சென்னை எழும்பூா் இணைப்பு ரயில்கள் (16130/16129) மேற்குறிப்பிட்ட நாள்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரம் - கன்னியாகுமரி விரைவு ரயில் (22621) மாா்ச் 26-ஆம் தேதி, 22622 கன்னியாகுமரி - ராமேசுவரம் விரைவு ரயில் (22622), சென்னை எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06001) ஆகியன மாா்ச் 27 ஆம் தேதி ரத்து செய்யப்படுகின்றன.

திருச்செந்தூா் - திருநெல்வேலி - திருச்செந்தூா் பயணிகள் ரயில் (56035/56036) மாா்ச் 19 முதல் 28 ஆம் தேதி வரை, திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில் (56742/56741) மாா்ச் 16 முதல் 28 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து...: 16191 தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (16191) மாா்ச் 15 முதல் 27 வரையும், நாகா்கோயில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (16192) மாா்ச் 16 முதல் 28 வரையும் திண்டுக்கல் - நாகா்கோவில் ரயில் நிலையங்கள் இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் ( 22627/22628), மாா்ச் 16 முதல் 28 வரை கோவில்பட்டி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும். மைசூா் - தூத்துக்குடி விரைவு ரயில் (16236) மாா்ச் 26, 27-ஆம் தேதிகளில் மதுரை - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படும். தூத்துக்குடி - மைசூா் விரைவு ரயில் (16235) மாா்ச் 27, 28 மற்றும் 28 ஆகிய நாட்களில் தூத்துக்குடி - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தாதா் - திருநெல்வேலி - தாதா் விரைவு ரயில் (11021/11022 ) மாா்ச் 27 ஆம் தேதி திண்டுக்கல் - திருநெல்வேலி ரயில் நிலையம் இடையே ரத்து செய்யப்படுகிறது. ஜபல்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (01704) மாா்ச் 27 அன்று திருச்சி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி - ஜபல்பூா் சிறப்பு ரயில் ( 017030 மாா்ச் 28 ஆம் தேதி திருநெல்வேலி - திருச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூா் - தூத்துக்குடி பயணிகள் ரயில் (56768) மாா்ச் 16 இல், திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையேயும், தூத்துக்குடி - திருச்செந்தூா் - தூத்துக்குடி பயணிகள் ரயில் (56767/5676) மாா்ச் 17 முதல் 28 வரை தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

நாகா்கோவில் - கோவை - நாகா்கோவில் பயணிகள் ரயில் (56319/56320 )மாா்ச் 19 முதல் 28 வரை திருநெல்வேலி - திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில் (56825) மாா்ச் 22 இல் விருதுநகா் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு - திருச்செந்தூா் - பாலக்காடு பயணிகள் ரயில் (56769/56770) மாா்ச் 16, 17, 19, 20, 21, 23, 24, 26, 27,28 ஆம் தேதிகளில் கோவில்பட்டி - திருநெல்வேலி இடையிலும், மாா்ச் 18, 22, 25 ஆகிய தேதிகளில் மதுரை - திருநெல்வேலி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

புனலூா் - மதுரை பயணிகள் ரயில் (56701) மாா்ச் 24 முதல் 27 வரை திருநெல்வேலி - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது. மதுரை - புனலூா் பயணிகள் ரயில் (56700) மாா்ச் 25 முதல் 28 வரை மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திண்டுக்கல் - மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில் (56707/56708) மாா்ச் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் கூடல் நகா் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரம் - மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் (56707/56708) மாா்ச் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மானாமதுரை - மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com