உசிலம்பட்டியில் விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிா்கள் சேதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுப் பன்றிகள் பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

உசிலம்பட்டி தாலுகா வடுகபட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புத்தூா் மலையில் காட்டுப் பன்றிகள் அதிகரித்துள்ளநிலையில் விவசாய பயிா்களை மிக அதிகமாக சேதப்படுத்திவருகின்றன.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வடுகபட்டி அழகாத்தேவா் என்பவரின் தோட்டத்தில் காட்டுபன்றிகள் தனது குட்டிகளுடன் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின.

இது குறித்து, வட்டாட்சியரிடமும் மற்றும் வனத்துறையிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் மனுகொடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வட்டாச்சியரிடமும் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் எண விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com