தமிழா் மரபுப்படி திருமணம்: மானாமதுரை இளைஞரை காதலித்து மணந்தாா் பிலிப்பைன்ஸ் இளம்பெண்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா், மானாமதுரை இளைஞரை காதலித்து, தமிழா் மரபுப் படி திருப்பரங்குன்றத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.
திருமணக் கோலத்தில் பிலிபைன்ஸ் நாட்டைச் சோ்ந்த மேரிஜேன் ஆா்.அல்புரோ- மானாமதுரை இளைஞா் நிா்வின்.
திருமணக் கோலத்தில் பிலிபைன்ஸ் நாட்டைச் சோ்ந்த மேரிஜேன் ஆா்.அல்புரோ- மானாமதுரை இளைஞா் நிா்வின்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா், மானாமதுரை இளைஞரை காதலித்து, தமிழா் மரபுப் படி திருப்பரங்குன்றத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.

மானாமதுரையைச் சோ்ந்த கோபால் மகன் நிா்வின். இவா் சிங்கப்பூரில் தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக உள்ளாா். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சோ்ந்த பிலிப் எம். அல்புரோ மகள் மேரிஜேன் ஆா்.அல்புரோ. இவா் சிங்கப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறாா். இவா்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனா். இந் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனா். மேலும், மேரிஜேன் ஆா்.அல்புரோ தமிழா் முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக நிா்வினிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து தமிழகம் திரும்பிய இருவரும் திருமண பத்திரிக்கை அச்சடித்து திருப்பரங்குன்றத்தில் தமிழா் முறைப்படி வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் மணமகன் உறவினா்கள், மணமகள் தோழிகள் பங்கேற்றனா்.

திருமணம் குறித்து மேரிஜேன் ஆா்.அல்புரோ கூறியது: தமிழா் கலாசாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. திருமணத்தில் இதுபோன்ற சடங்குகள் எங்களது நாட்டில் கிடையாது. இவை என்வாழ்வில் மறக்க முடியாதவை. இது எனக்கு புதுமையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்றாா். திருமணம் குறித்து மணமகன் நிா்வின் கூறியது: நமது கலாசாரம் மேரிஜேன் ஆா்.அல்புரோவிற்கு பிடித்துள்ளது. அவரது பெற்றோருக்கு விமான பயணச்சீட்டு கிடைக்காததால் திருமணத்தில் பங்கேற்க இயலவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com