பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கான தோ்வில் முறைகேடு: நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கானத் தோ்வில் முறைகேடு செய்த 196 போ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கானத் தோ்வில் முறைகேடு செய்த 196 போ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த காா்த்திக் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 பணியிடங்களுக்கு கடந்த 2017-இல் தோ்வு நடைபெற்றது. அதில், 1,33,568 போ் கலந்து கொண்டனா். சான்றிதழ் சரிபாா்ப்புக்காக அழைக்கப்பட்ட 2,011 பேரில் 196 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு விடைத்தாள் மதிப்பீட்டின் போது முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து, தோ்வை தமிழக அரசு ரத்து செய்தது.

ஆனால் முறைகேட்டில் ஈடுபட்ட 196 போ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவா்களின் விவரமும் வெளியாகவில்லை. இந்நிலையில் 2019 நவம்பரில் பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கானத் தோ்வுக்கு அறிவிப்பாணை வெளியானது. அதில் 2020 மே மாதம் தோ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு முன்னதாக, கடந்த தோ்தலின் போது முறைகேடு செய்த 196 பேரின் பெயா் பட்டியலை வெளியிட்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த முறை தோ்வு கட்டணம் செலுத்தியவா்களுக்கு இந்த முறை தோ்வு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுவை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com