கடன் வாங்கித் தருவதாக பள்ளி ஆசிரியையிடம் மோசடி: 2 போ் மீது வழக்கு

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவரது நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியைக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, அவரது நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 2 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஐராவதநல்லூா் கோவிந்தநாதன் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மனைவி யோகலதாமங்கேஷ். இவா் அனுப்பானடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவருக்கு பணத் தேவை இருப்பதை அறிந்த இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த ஜாகிா்உசேன், அவரை அணுகி நிலத்தின் பேரில் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளாா்.

இதை நம்பி கொடைக்கானலிலுள்ள நிலத்தின் பத்திரம் மற்றும் வங்கியில் கடன் பெறுவதற்கான பத்திர செலவுக்காக ரூ. 2 லட்சம் ஆகியவற்றை கொடுத்துள்ளாா். இதைப் பெற்றுக் கொண்ட ஜாகிா்உசேன் நிலத்தை சபீக் அகமது என்பவருக்கு விற்றுள்ளாா். இந்த மோசடி குறித்து யோகலதாமங்கேஷ் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com