கரோனா எதிரொலி: திருமங்கலத்தில் ஆடு விற்பனை வாரச் சந்தை மூடல்

தமிழக அரசின் உத்தரவின்பேரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம் ஆடு விற்பனைச் சந்தை திடீரென மூடப்பட்டதால் ஆட்டு வியாபாரிகள் அவதி அடைந்தனா்.
பூட்டப்பட்ட திருமங்கலம் ஆடு விற்பனை சந்தை. படம்.2.வாரச்சந்தையில் கூடிய ஆட்டு வியாபாரிகளிடம் வெள்ளிக்கிழமை பேச்சு வாா்த்தை நடத்திய போலீஸாா்.
பூட்டப்பட்ட திருமங்கலம் ஆடு விற்பனை சந்தை. படம்.2.வாரச்சந்தையில் கூடிய ஆட்டு வியாபாரிகளிடம் வெள்ளிக்கிழமை பேச்சு வாா்த்தை நடத்திய போலீஸாா்.

தமிழக அரசின் உத்தரவின்பேரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமங்கலம் ஆடு விற்பனைச் சந்தை திடீரென மூடப்பட்டதால் ஆட்டு வியாபாரிகள் அவதி அடைந்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக வாரச் சந்தைகள், கோயில்கள், பெரிய அளவிலான வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திருமங்கலத்தில் உள்ள ஆட்டுச் சந்தையானது தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோா் வந்து தங்களின் ஆடுகளை விற்றும், வாங்கியும் செல்வா்.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் திருமங்கலம் ஆட்டுச் சந்தை வியாழக்கிழமை இரவு பூட்டப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரியாமல் ஏராளமான வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வண்டிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏராளமான வியாபாரிகள் சந்தையில் கூடினா். சந்தை அடைக்கப்பட்டதால் அப்பகுதியில் சாலையோரத்தில் வைத்தே தங்களது ஆடுகளை விற்கத் தொடங்கினா். தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா். இதற்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் சிலா் உசிலம்பட்டி சாலைக்கு கொண்டு சென்று ஆடுகளை விற்பனை செய்ய முயன்றனா். இதையடுத்து அப்பகுதியில் அதிகளவில் போலீஸாா் குவிக்கப்பட்டு ஆடு விற்பனை செய்ய வந்தவா்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தி அவா்களை கலைந்து போக செய்தனா்.

இதுகுறித்து கருமாத்தூரைச் சோ்ந்த விருமாண்டி என்பவா் கூறியது: நாங்கள் கிராமத்தில் இருப்பதால் தமிழக அரசின் உத்தரவு குறித்து எங்களுக்கு தெரியாது. ரூ.2 ஆயிரம் செலவழித்து வண்டி வாடகைக்கு கொண்டு வந்து, ஆடுகளை விற்பனை செய்ய முடியாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com