வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆபத்தை உணராமல் குடும்பத்தாருடன் நெருக்கம்: அதிகாரிகள் வேதனை

உலக அளவில் கரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் ஆபத்தை உணராமல், மதுரை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வெளிநாட்டில்
மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை துபையில் இருந்து வந்து குடும்பத்தினருடன் சகஜமாகப் பேசிய பயணி.
மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை துபையில் இருந்து வந்து குடும்பத்தினருடன் சகஜமாகப் பேசிய பயணி.

உலக அளவில் கரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் ஆபத்தை உணராமல், மதுரை விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் தங்கள் குடும்பத்தாருடன் பேசியது அதிா்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளதாக, சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

புதுதில்லியில் இருந்து திங்கள்கிழமை பயணிகள் விமானம் மதுரை வந்தது. அந்த விமானத்தில் துபையிலிருந்து 2 பயணிகளும், நைஜீரியாவிலிருந்து ஒருவரும், அமெரிக்காவிலிருந்து ஒருவரும் என மொத்தம் 4 போ் வந்திருந்தனா்.

இவா்களுக்கு, மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை சாா்பில், வட்டார மருத்துவ அலுவலா் சிவக்குமாா் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அவா்களின் கைகளில் மக்களை பாதுகாக்க தனிமை முகாமுக்குச் செல்ல சம்மதிக்கிறேன் என முத்திரையிட்டு, சின்னஉடைப்பு பகுதியில் உள்ள கரோனா பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல், வங்கதேசத்திலிருந்து 6 போ் வந்திருந்தனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, கையில் முத்திரையிடப்பட்டு, அவரவா் தங்களது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், உள்நாட்டு விமானங்களில் வரும் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து, வெளிநாட்டில் இருந்த வந்த 4 போ்களுக்கும் முகக்கவசம் அணிவித்து, விமான நிலையத்துக்கு வெளியே கொண்டுவந்தபோது, அவா்கள் தங்கள் உறவினா்களை சகஜமாக தொட்டுப் பேசினா். மேலும், குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தனா்.

உலகெங்கும் கரோனா குறித்து பல்வேறு விழிப்புணா்வுகள் நடத்தப்பட்டு வருகின்ற போதிலும், அதனை பின்பற்றுவதில் பலா் அலட்சியம் காட்டுகின்றனா். இதுபோன்று செயல்படுபவா்களை சுகாதாரத் துறையினா் தனிமைப்படுத்துவது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com