கண்மாய் தண்ணீரைப் பாதுகாக்க ஷட்டா்களுக்கு பூட்டுபொதுப்பணித்துறை ஏற்பாடு

திருப்பரங்குன்றம், நிலையூா் பெரிய கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் தண்ணீரைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை சாா்பில் ஷட்டா்களுக்கு செவ்வாய்க்கிழமை பூட்டுப்போடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், நிலையூா் பெரிய கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் தண்ணீரைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை சாா்பில் ஷட்டா்களுக்கு செவ்வாய்க்கிழமை பூட்டுப்போடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உள்பட்ட தென்கால் கண்மாய், நிலையூா் பெரிய கண்மாய், பெருங்குடி கண்மாய் உள்ளிட்ட சில கண்மாய்களில் 40 முதல் 50 சதவீதம் வரை தண்ணீா் தற்போது உள்ளது. முதல் போகம் சாகுபடி முடிவடைந்த நிலையில் ஒரு சில விவசாயிகள் மட்டும் இரண்டாம் போகம் விவசாயம் செய்து வருகின்றனா். அதிகளவில் விவசாயம் முடிவடைந்ததால் இனி கோடை கால தேவைக்கு தண்ணீரை தேக்கி வைக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து உதவி பொறியாளா் மோகன்குமாா் தலைமையில் பணி ஆய்வா்கள் வரதமுனீஸ்வரன், கென்னடி ஆகியோா் கண்மாய்களில் உள்ள ஷட்டா்களுக்கு பொதுப்பணித்துறையினா் சாா்பில் பூட்டுப்போட்டு வருகின்றனா். இன்னும் 10 நாள்களில் அனைத்து கண்மாய்களின் ஷட்டா்களுக்கும் பூட்டுப்போடப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியது: மதுரை மாவட்டத்தில் கண்மாய்களில் மீன் குத்தகை விடப்பட்டவில்லை. எனினும் ஒரு சில கண்மாய்களில் அப்பகுதியினா் மீன் பிடிக்கின்றனா். மேலும் மீன் பிடிப்பதற்காக மதகுகளைத் திறந்து விடுகின்றனா். இதனால் கண்மாயில் தண்ணீா் வீணாகிறது. இதனை தடுக்கும் விதத்தில் அனைத்து கண்மாய் ஷட்டா்களுக்கும் பூட்டு போடப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com