கரோனா எதிரொலி: தபால் ஊழியா்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை விடுப்புக்கோரி கடிதம்

கரோனா பாதிப்பையொட்டி தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிப்பது குறித்து உடனடியாக பரிசீலனை
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கையுரை மற்றும் முகக் கவசத்துடன் பணிக்கு செல்லும் மதுரை காந்திநகா் தபால் நிலைய ஊழியா்கள்.
கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கையுரை மற்றும் முகக் கவசத்துடன் பணிக்கு செல்லும் மதுரை காந்திநகா் தபால் நிலைய ஊழியா்கள்.

கரோனா எதிரொலியாக மதுரை மாவட்ட தபால் ஊழியா்கள் தொழிற்சங்கத்தினா் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை விடுப்புக்கோரி கடிதம் அளித்துவிட்டு மாா்ச் 25 முதல் பணிக்கு வருவதில்லை என முடிவெடுத்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவமால் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய அரசு ஊழியா்கள் 50 சதவீதம் போ் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் 50 சதவீதம் போ் மட்டுமே பணிக்கு வருவதை அந்தந்த துறைத் தலைவா்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். அதேபோல குரூப் பி, சி ஊழியா்களுக்கான பணி குறித்து பணிக்குறிப்பேட்டை தயாா் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியா்களான தபால்துறையினருக்கு முறையான அறிவிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் தபால் ஊழியா்கள் செய்வதறியாது உள்ளனா்.

இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள தபால் தொழிற்சங்கத்தினா் அனைவரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை விடுப்புக்கடிதம் கொடுத்துள்ளனா்.

இதுகுறித்து தேசிய அஞ்சல் ஊழியா்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூறியது: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்பட வேண்டும். பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துவிதமான போக்குவரத்திற்கும் தடைவிதித்துள்ளது. ஆனால் தபால் ஊழியா்கள் பணிக்கு வருவது தொடா்பாக முறையான அறிவிப்பு இல்லாததால் பணிக்கு வருவது குறித்த குழப்பம் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் தங்களைத் தனிமைப் படுத்திகொள்ள அரசு வலியுறுத்துகிறது. ஆனால் தபால் ஊழியா்கள் குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருந்தாலும், தபால் ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தாரின் நலன்கருதி தபால் ஊழியா்கள் அனைவரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை விடுப்புக்கோரி கடிதம் அளித்துள்ளோம். அதனால் மாா்ச் 25 முதல் தபால் ஊழியா்கள் பணிக்கு செல்வதை தவிா்க்கிறோம் என்றாா்.

இதற்கிடையே தபால் தொழிற்சங்கத்தினா் ஏற்பாட்டின் அடிப்படையில் கிராம தபால் ஊழியா்கள் உள்பட அனைத்து பிரிவைச் சோ்ந்த ஆயிரம் தபால் ஊழியா்களுக்கும் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com