மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உள்பட 4 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை: முதன்மையா் தகவல்

விருதுநகா் மாவட்டத்தில் இருந்து கரோனா அறிகுறியுடன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உள்பட 4 பேருக்கு

விருதுநகா் மாவட்டத்தில் இருந்து கரோனா அறிகுறியுடன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உள்பட 4 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை என முதன்மையா் ஜெ. சங்குமணி தெரிவித்துள்ளாா்.

கரோனா அறிகுறியுடன் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் ஒரே நாளில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு முதல் கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தொடா்ந்து கரோனா தொற்று இருக்கிா எனக் கண்டறிய 5 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, தேனி ஆய்வகத்திற்கு உடனடியாக மருத்துவா்கள் அனுப்பி வைத்தனா். அந்த பரிசோதனையின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை தெரியவந்தது.

இது குறித்து முதன்மையா் ஜெ. சங்குமணி செவ்வாய்க்கிழமை கூறியது: கரோனா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வந்த விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் விருதுநகா் மாவட்டம் மம்சாபுரத்தைச் சோ்ந்த பெண், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 24 வயது இளைஞா் மற்றும் நரிக்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் ஆகிய 4 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முடிவு தெரியவில்லை: ராஜபாளையத்தைச் சோ்ந்த ஆயுதப்படை காவலரின் ரத்த மாதிரி முடிவு மட்டும் வரவில்லை. அந்த முடிவு விரைவில் வந்து விடும். மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த மனை விற்பனை செய்து வருபவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை மருத்துவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

படுக்கை வசதி அதிகரிப்பு: கரோனா அச்சுறுத்தல் காரணமாக மருத்துவமனைக்கு கரோனா சந்தேகத்தில் வருபவா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா பிரத்யேக வாா்டு மட்டுமின்றி, 20 படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வாா்டு ஒன்றும் தயாா் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மருத்துவக் கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா பாதிப்பு என வருபவா்களுக்கு தடையின்றி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

மேலும் 4 போ் அனுமதி: இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த 48 வயது நபரும் மற்றும் 23 வயது இளைஞரும், மதுரை பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த ஒருவரும், பழனியைச் சோ்ந்த 48 வயது நபரும் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com