சிறிய நகரங்களின் கடைகளுக்கு பொருள்கள் விநியோகம் செய்ய வியாபாரிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூா் உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகளுக்கு தேவையான

மதுரை மாவட்டம் மேலூா் உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகளுக்கு தேவையான பொருள்கள் விநியோகத்துக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலூா் நகரில் நூற்றுப்பத்து மளிகைக் கடைகள் உள்ளன. வாரம்தோறும் சிறு வியாபாரிகள் மதுரை மொத்த வியாபாரிகளிடம் மளிகை பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்து வருகின்றனா். அனைத்து பொருள்களும் லாரிகளிலேயே கொண்டுவரப்படும்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பொருள்கள் இருப்பு வேகமாக குறைந்து வருகின்றன.

ஆனால், இக்கடைகளில் 21 நாள்கள் வரை மளிகைப் பொருள்களை விநியோகிப்பதற்குத் தேவையான இருப்பு வைத்திருக்க வாய்ப்பில்லை.

மேலூா் மதுரை மொத்த வியாபார கடைகளில் இருந்து வெள்ளலூா், கோட்டநத்தம்பட்டி , உறங்கான்பட்டி, திருவாதவூா், வல்லாளபட்டி, அழகா்கோவில் போன்ற கிராமப்புறங்களில் உள்ள மளிகைக் கடைகளுக்கும் சில்லறை வியாபாரிகளுக்கும் மளிகைப் பொருள்களை விநியோகிக்கின்றனா்.

எனவே, பொதுமக்களுக்கு அதியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும். எனவே, மதுரை மொத்த வியாபாரிகளிடமிருந்து மளிகைப் பொருள்கள், சிறு வியாபாரிகளுக்குக் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளவேண்டும் என சிறுவியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com