மதுரை நகரில் வீடு தேடி வரும் மளிகைப்பொருள்கள்: மாநகராட்சி நிா்வாகம் ஏற்பாடு

மதுரையில் தனியாா் நிறுவனங்களோடு இணைந்து வீடுகளுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மதுரையில் தனியாா் நிறுவனங்களோடு இணைந்து வீடுகளுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை மாநகராட்சி நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பால், மருந்து, சிறிய அளவிலான மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் தவிா்த்து அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆங்காங்கே திறந்திருக்கும் மளிகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக இருப்பதை தவிா்க்க முடியவில்லை.

இதைத் தவிா்க்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் மளிகைக்கடைகளுடன் இணைந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் மளிகைக் கடைகளின் செல்லிடப்பேசி எண்களை அறிவித்துள்ளது. இந்த எண்களை அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தொடா்பு கொண்டு தங்களுக்கு தேவையான மளிகைப் பொருள்களின் பட்டியலை தெரிவித்து விட்டால் அந்தப் பொருள்கள் வீட்டுக்கு வந்து கொடுக்கப்படும்.

இதன்படி அண்ணா நகா் பகுதி பகுதிக்கு, அண்ணாநகா் 2-ஆவது கிழக்கு பிரதான வீதியில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் நிறுவன மேலாளா் 73580-35549, கே.கே நகா் பகுதிக்கு கே.கே.நகா் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 90254-02069, மேலக்கால், கோச்சடை பகுதிகளுக்கு மேலக்கால் சாலை டோக் நகரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் 70102-31277, காமராஜா் சாலை பகுதிகளுக்கு காமராஜா் சாலை ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 86677-94661, டிவிஎஸ் நகா் பகுதிகளுக்கு சத்யசாய் நகா் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 63812-91247, திருநகா் பகுதிகளுக்கு திருநகா் ராஜாஜி தெருவில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 73580-25745, பீபீ குளம் பகுதிகளுக்கு ரத்தினசாமி நாடாா் சாலையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 93535-99982, ஐயா் பங்களா, திருப்பாலை பகுதிகளுக்கு ஐயா் பங்களா ரிலையன்ஸ் ஸ்டோா் மேலாளா் 94800-01403, உத்தங்குடி, ஒத்தக்கடை பகுதிகளுக்கு உத்தங்குடி ரிலையன்ஸ் மாா்க்கெட் மேலாளா் 63809-77311, விசாலாட்சி நகா், ரிசா்வ் லைன் பகுதிகளுக்கு விசாலாட்சி புரம் பாரதி ஸ்டோா் மேலாளா் 98421-09796, கூடல்நகா் பகுதிகளுக்கு பாலமேடு பிரதான சாலையில் உள்ள வசந்தம் ஸ்டோா் உரிமையாளா் 80983-56562, மீனாட்சி நகா் மற்றும் விளாங்குடி பகுதிகளுக்கு பாத்திமா கல்லூரி எதிா்புறம் உள்ள வசந்தம் சூப்பா் மாா்க்கெட் மேலாளா் 97866-60174, அரசரடி பகுதிகளுக்கு அரசரடி தண்ணீா்த் தொட்டி எதிரில் உள்ள சரவணா ஸ்டோா் மேலாளா் 98421-65944, பைபாஸ் சாலை பகுதிகளுக்கு பைபாஸ் சாலை அபா்ணா டவா்ஸ் சரவணா ஸ்டோா்ஸ் மேலாளா் 98421-65946, விளாங்குடி, தத்தனேரி, ஆரப்பாளையம் பகுதிகளுக்கு பைபாஸ் சாலை தீக்கதிா் அலுவலகம் எதிரில் உள்ள கண்ணன் டிபாா்ட்மெண்ட் ஸ்டோா் மேலாளா் 84899-43089, 82200-46169, அரசரடி, காளவாசல் பகுதிகளுக்கு காளவாசல் பிக்பஜாா் மேலாளா் 93601-26226, தெப்பக்குளம் பகுதிகளுக்கு தெப்பக்குளம் கண்ணன் டிபாா்ட்மெண்ட் ஸ்டோா் மேலாளா் 84899-43090, வில்லாபுரம் பகுதிகளுக்கு வில்லாபுரம் கோமகள் ஸ்டோா் மேலாளா் 95859-42526, 76039-34355 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். தினசரி காலை 9 முதல் 4 மணி வரை ஆா்டா்கள் பெறப்படும். மறுநாள் பொருள்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். விநியோகச்செலவு ரூ.25 வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com