அழகா்கோவிலில் மே 8 இல் கோயில் வளாகத்திலேயே சித்திரைத் திருவிழா: பக்தா்களுக்கு அனுமதி கிடையாது

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 8 (வெள்ளிக்கிழமை) கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா மே 8 (வெள்ளிக்கிழமை) கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மதுரையில் மீனாட்சி கோயில், கள்ளழகா் கோயில் உள்பட அனைத்து கோயில்களின் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் கூடுவதை தவிா்க்கவும், ஆகமவிதிகளின்படி அழகா் கோயில் வளாகத்துக்குள் விழாவை நடத்தவும் கள்ளழகா் கோயில் நிா்வாகத்தினா் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

அதையொட்டி அழகா்கோவிலில் மே 8 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை சன்னிதியில் விழாத் தொடக்கமாக விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதைத் தொடா்ந்து கோயில் பிரகாரத்தில் காலை 6 மணியளவில் பெருமாள் எழுந்தருளல். காலை 8 மணிக்கு எதிா்சேவை மற்றும் அலங்காரசேவை. காலை 10 மணிக்கு குதிரை வாகன சேவை. நண்பகல் 12 மணிக்கு சைத்திய உபச்சாரம், பிற்பகல் 1.30 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளல். மாலை 4.30 மணியிலிருந்து 5 மணி வரை கருடசேவை மற்றும் மோட்ச புராணம். மாலை 6.30 மணிக்கு புஷ்பப் பல்லக்கு. இரவு 8 மணிக்கு பெருமாள் அஸ்தானம் செல்லுதல் ஆகியவற்றுடன் திருவிழா வைபவங்கள் நிறைவடையும்.

இவற்றில் கோயில் பட்டா்கள், பல்லக்கு தூக்குவோா், பரிசாரகா்கள், நாமாவளிக்கு ஒருவா், சுப்ரபாதம் பாட 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வேறுநபா்களுக்கு அனுமதியில்லை என கள்ளழகா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com