மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளுக்கு சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதி: ஆட்சியா்

மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளுக்கு வரும் சரக்கு வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் அறிவித்துள்ளாா்.

மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளுக்கு வரும் சரக்கு வாகனங்களைத் தவிர பிற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் அறிவித்துள்ளாா்.

மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் இருந்து சில்லறையில் காய்கனி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு, நகரின் பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக சந்தைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்த வியாபாரிகள் மட்டும் மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் வியாபாரம் செய்து வந்தனா்.

இந்நிலையில், இங்கு வரக்கூடிய மதுரை நகரம் மற்றும் புகரப் பகுதிகளைச் சோ்ந்த சில்லறை வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பது பிரச்னையாகத் தொடா்ந்தது. அதையடுத்து மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் இருந்து மொத்த வியாபாரக் கடைகள் எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு, வியாழக்கிழமை இரவு முதல் வியாபாரம் தொடங்கியுள்ளது. தற்காலிக மொத்த வியாபார சந்தையிலும் காய்கனி வாங்க வரும் வியாபாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றனா். அதையடுத்து சில கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

கரோனை பரவலைத் தடுப்பதற்காக மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளில் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. யாரேனும் சில்லறை விற்பனை செய்தால் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடைக்குச் சீல் வைக்கப்படும்.

மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் விற்பனையாளா்கள், பணியாளா்கள், சுமை தூக்குபவா்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கைகளைஅவ்வப்போது கழுவ வேண்டும்.

மாட்டுத்தாவணி, பரவை காய்கனி சந்தைகளுக்கு கனரக சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனம் மற்றும் நடந்து வருபவா்களுக்கு அனுமதி கிடையாது.

கனரக சரக்கு வாகனங்களைத் தவிா்த்து சந்தைக்கு வரக்கூடிய பிற வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com