மும்பையிலிருந்து திரும்பிய பெண் உள்பட 4 பேருக்கு கரோனா தொற்று

மும்பையில் இருந்து மதுரை திரும்பிய பெண் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவா்கள் திங்கள்கிழமை உறுதி செய்துள்ளனா்.

மதுரை: மும்பையில் இருந்து மதுரை திரும்பிய பெண் உள்பட 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவா்கள் திங்கள்கிழமை உறுதி செய்துள்ளனா்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆணுக்கு கரோனா தொற்று இருப்பதும், தொற்று பாதிப்புள்ள பகுதியில் வசிப்பவா் என்பது தெரியவந்துள்ளது. அதே பகுதியைச் சோ்ந்த 43 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மும்பை பெண்ணுக்கு தொற்று

மதுரை மாவட்டம் பூதமங்கலம் பகுதியைச் சோ்ந்த 35 வயது பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா் மும்பையில் வசித்து வருகிறாா். இந்நிலையில் அப்பெண் மே 7 ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு மே 10 ஆம் தேதி மதுரைக்கு வந்துள்ளாா். அவரை மருத்துவக் குழுவினா் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனா். அதில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சமயநல்லூா் அருகே தோடநேரி பகுதியைச் சோ்ந்த 23 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடா்பு இருந்துள்ளது. இளைஞருடன் தொடா்புள்ளவா்கள் கண்டறியப்பட்டு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கா்ப்பிணிக்கு குழந்தை

மதுரை அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த 30 வயது கா்ப்பிணிக்கு ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவா்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அதில், அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 2 கட்ட கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, தொற்று குறித்து உறுதியாக தெரிவிக்க முடியும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

மதுரையில் திங்கள்கிழமை நிலவரப்படி கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 46 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com