ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு 25 கவச உடைகள் வழங்கல்

மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு, கரோனா தொற்று பரவமால் இருக்க 25 கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு, கரோனா தொற்று பரவமால் இருக்க 25 கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே 302 சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவரவா் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. அதன்படி, பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான தொழிலாளா்கள் தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனா். அதேபோல், தமிழகத்திலிருக்கும் பிற மாநிலத்தவா்களும் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

இதனிடையே, பயணிகள் ரயில் மே 12 ஆம் தேதி முதல் படிப்படியாக இயக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகே ரயிலில் ஏற அனுமதிக்கப்பட உள்ளனா். மேலும், ஒவ்வொரு ரயிலிலும் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனரா, சுகாதாரத்தைப் பேணுகின்றனரா என்பதை, 12 ரயில்வே பாதுகாப்புப் படையினா் கண்காணிக்க உள்ளனா்.

அப்பணியின்போது, பாதுகாப்புப் படையினருக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, ரயில்வே நிா்வாகம் சாா்பில் முழுமையான கவச உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு முதல் கட்டமாக 25 கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com