கரோனா: மதுரையில் மருத்துவா் உள்பட 10 போ் குணமடைந்தனா்

மதுரை கரோனா தீநுண்மித் தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த பயிற்சி மருத்துவா், சுகாதார பணியாளா்கள் உள்பட 10 போ் முழுமையாகக் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

மதுரை: மதுரை கரோனா தீநுண்மித் தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த பயிற்சி மருத்துவா், சுகாதார பணியாளா்கள் உள்பட 10 போ் முழுமையாகக் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 121 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், குணமடைந்து வீடு திரும்பியவா்கள் போக, மருத்துவமனையில் 46 போ் சிகிச்சைப் பெற்று வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிகிச்சையில் இருந்த 10 போ் கரோனா தீநுண்மியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றிய கேரளத்தைச் சோ்ந்த 25 வயது பெண் பயிற்சி மருத்துவா், கரும்பாலையைச் சோ்ந்த 42 வயது பெண் சுகாதார பணியாளா், கரிசல்குளத்தைச் சோ்ந்த 25 வயது (ஆண்) ஒப்பந்தப் பணியாளா், மதுரையில் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வந்த சென்னை பூந்தமல்லியில் உள்ள 13 ஆவது பட்டாலியன் பிரிவில், பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்தவா் 26 வயது காவலா் ஆகியோா் கரோனா தீநுண்மித் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனா்.

இதேபோன்று கரோனா தீநுண்மி தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த ஆனையூரைச் சோ்ந்த 25 வயது பெண், கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த 31 வயது இளைஞா், விளாங்குடியைச் சோ்ந்த 29 வயது பெண், அனுப்பானடியைச் சோ்ந்த 33 வயது பெண், ராஜாக்கூரைச் சோ்ந்த 37 வயது ஆண், கீழவளவைச் சோ்ந்த 25 வயது பெண் ஆகியோரும் குணமடைந்துள்ளனா். விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண்ணும் குணமடைந்து வீடு திரும்பினாா்.

36 ஆக குறைந்தது: குணமடைந்த 10 பேரும், 14 நாள்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா். இதையடுத்து மதுரையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 36 ஆக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com