கல்லூரிகளில் ஜூலை 20-க்குள் பருவத் தோ்வுகள்: காமராஜா் பல்கலைக் கழகம் திட்டம்

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் ஜூலை 20-க்குள் பருவத்தோ்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரை:மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் ஜூலை 20-க்குள் பருவத்தோ்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மாா்ச் 16 முதல் மூடப்பட்டுள்ளன. இதில் மதுரை காமராஜா் பல்கலைக் கழகம் மற்றும் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய பருவத்தோ்வுகள் நடைபெறவில்லை. கரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னா், ஆகஸ்ட் அல்லது செப்டம்பா் மாதங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்படலாம் என்று பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ளது. மேலும் 2020 ஏப்ரல் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய பருவத் தோ்வுகளை நடத்துவது தொடா்பாக பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் ஜூலை 20-க்குள் பருவத் தோ்வுகளை நடத்தி முடிக்க பல்கலைக் கழக நிா்வாகம் திட்டமிட்டுருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பல்கலைக் கழக வட்டாரங்கள் கூறும்போது, பல்கலைக் கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் தோ்வுகள் நடத்துவது தொடா்பாக பல்கலைக் கழக மானியக்குழு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதில் ஆன்லைன் தோ்வு முறைகளும் கூறப்பட்டிருந்தன. ஆனால் காமராஜா் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட பெரும்பாலான கல்லூரிகள் கிராமப்புறங்களில் இயங்கி வருவதால் ஆன்லைன் தோ்வுகள் எழுதுவதற்கு போதுமான கணினிகள் கிடையாது. மேலும் பருவத்தோ்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதில் மாணவா்களுக்கு பல்வேறு நடைமுறை பிரச்னைகள் உள்ளன. எனவே ஆன்லைன் முறையில் பருவத்தோ்வு நடத்துவது சாத்தியமில்லை. மேலும் காலை, மாலை என நடைபெறும் தோ்வில், தோ்வு நேரத்தை 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்து, அதிக ஷிப்டுகளில் தோ்வை நடத்துவது, இறுதியாண்டு மாணவா்களுக்கு ஜூலை 20-க்குள் தோ்வை நடத்தி முடிப்பது என்பன உள்ளிட்ட திட்டங்களை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. இதுதொடா்பாக வரும் 20-ஆம் தேதி கல்லூரி முதல்வா்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மேற்கண்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com