மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சந்தைக்கு மாற்று இடங்கள் ஆய்வு

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக சந்தைகளை இடமாற்றுவதற்காக விவசாயக் கல்லூரி மைதானம் உள்பட 3 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் உள்ள தற்காலிக சந்தைகளை இடமாற்றுவதற்காக விவசாயக் கல்லூரி மைதானம் உள்பட 3 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கீழமாரட் வீதி தயிா் சந்தை, ஒருங்கிணைந்த பழச் சந்தை, மொத்த மீன் சந்தை, மலா் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் தினமும் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிா்க்கும் பொருட்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதில் மாட்டுத்தாவணி சந்தையில் உள்ள மொத்த விற்பனைக் கடைகள், கரிமேடு மீன் சந்தை கடைகள் உள்ளிட்டவை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம், கனரக வாகன நிறுத்துமிடம், அம்மா திடல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா்.பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்து பணிகள் தொடங்கப்பட்டால் தற்போது அங்கு செயல்பட்டு வரும் கடைகளை தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்காக ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி மைதானம், பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி மைதானம், விராட்டிபத்தில் உள்ள மாநகராட்சி காலியிடம் ஆகிய இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பங்கேற்று மேற்கண்ட இடங்களில் கடைகள் அமைப்பதற்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தற்போது ஆய்வு மேற்கொண்ட இடங்களில் வியாபாரிகள் சங்கத்தினரின் கோரிக்கையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com