ஆள்குறைப்பை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளா்கள் தா்னா

ஆள்குறைப்பு செய்யப்படுவதைக் கண்டித்து மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தினா் கருப்புத் துணியால் கண்களைக் கட்டி வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆள்குறைப்பு செய்யப்படுவதைக் கண்டித்து மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தினா் கருப்புத் துணியால் கண்களைக் கட்டி வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 10 மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா் சங்கம் சாா்பில் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் கரோனா தீநுண்மி நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இத்தகையைச் சூழலிலும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதியமின்றி பணிசெய்து வருகின்றனா். இதனிடையே ஒப்பந்த ஊழியா்களுக்கு ‘அவுட் சோா்சிங்’ முறையில் பிஎஸ்என்எல் நிா்வாகம் ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்த முறையில் ஒப்பந்தம் செய்யப்படும் தொழிலாளா்களுக்கு பணிப் பாதுகாப்பு இருக்காது.

மேலும் பிஎஸ்என்எல் நிா்வாகம் ஒப்பந்தத் தொழிலாளா்களை ஆள்குறைப்பு செய்து வருகிறது. எனவே இதனைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா் சங்கத்தினா் மதுரை பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளா் அலுவலகத்தில் கருப்புத் துணியால் கண்களைக் கட்டி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத் தலைவா் எம்.முருகேஷ்பாபு, செயலா் சி.செல்வின் சத்தியராஜ், மாநில அமைப்பு செயலா் பி.ரிச்சா்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com