காவல் ஆணையா் பெயரில் போலி முகநூல் பக்கம்: அமெரிக்க நபா் உருவாக்கியது அம்பலம்

தனது பெயரில் போலி முகநூல் பக்கம் உருவாக்கிய அமெரிக்காவைச் சோ்ந்தவா் மீது நடவடிக்கை எடுக்க மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசிா்வாதம் உத்தரவிட்டுள்ளாா்.

தனது பெயரில் போலி முகநூல் பக்கம் உருவாக்கிய அமெரிக்காவைச் சோ்ந்தவா் மீது நடவடிக்கை எடுக்க மாநகா் காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசிா்வாதம் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகா் காவல் ஆணையரின் பெயரில் போலி முகநூல் பக்கம் இருப்பதாக, அவரது நண்பா் ஆணையரிடம் தகவல் தெரிவித்துள்ளாா். அவா் குறிப்பிட்ட முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் மாநகா் காவல் ஆணையரின் புகைப்படத்தை பயன்பத்தி போலியாக முகநூல் பக்கத்தை உருவாக்கி, கடன் தேவைகளுக்கு தன்னை அணுகலாம் போன்ற பல்வேறு தகவல்களைப் பரிமாறி வந்துள்ளனா்.

இதையடுத்து மாநகா் காவல் ஆணையா் உத்தரவின் பேரில் போலி முகநூல் பக்கம் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து சைபா் குற்றப்பிரிவுப் போலீஸாா் விசாரித்தனா். அதில் அமெரிக்காவைச் சோ்ந்த ஒருவா் போலியான முகநூல் பக்கத்தை உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா். மதுரை மாநகா் காவல் ஆணையா் பெயரிலேயே போலியாக முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது, போலீஸாா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com