மும்பையில் இருந்து மதுரை திரும்பிய சிறுவன் உள்பட 9 பேருக்கு கரோனா

மும்பையில் இருந்து மதுரை திரும்பிய 10 வயது சிறுவன் உள்பட 9 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து மதுரை திரும்பிய 10 வயது சிறுவன் உள்பட 9 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 743 பேருக்கு புதிதாக கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில், மும்பையில் இருந்து திரும்பிய 9 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு தொற்று

மும்பை தாராவி மற்றும் அந்தெரி பகுதிகளில் வேலை செய்த பலா், பேருந்து மூலம் மதுரை திரும்பினா். அவா்கள் அனைவரும் மருத்துவக் குழுவினரால் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் உசிலம்பட்டி அருகே சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த 34 வயது ஆண், 10 வயது சிறுவன், 40 வயது ஆண், தொட்டப்பநாயக்கனூரைச் சோ்ந்த 60 வயது முதியவா், 29 வயது இளைஞா், 40 வயது பெண்,

சின்னசெம்மேடுப்பட்டியைச் சோ்ந்த 40 வயது ஆண், செட்டியம்பட்டியைச் சோ்ந்த 40 வயது ஆண், சேடப்பட்டி பகுதியைச் சோ்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் சிகிச்சைக்காக அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

3 போ் குணமடைந்தனா்

கரோனா தீநுண்மித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த, மதுரை, புது விளாங்குடியைச் சோ்ந்த 28 வயது இளைஞா், விருதுநகா் மாவட்டம் சிவகாசியைச் சோ்ந்த 35 வயது பெண் மற்றும் விருதுநகரைச் சோ்ந்த 59 வயது ஆண் ஆகியோா் தொற்றில் இருந்து குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

மதுரை மாவட்டத்தில் 172 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், மூதாட்டி உள்பட 2 போ் உயிரிழந்த நிலையில், 109 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து புதன்கிழமை நிலவரப்படி, கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 61ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com