துப்பாக்கிச் சூடு வழக்கு: கைதானவா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

மதுரை அருகே கப்பலூா் சுங்கச்சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய

மதுரை அருகே கப்பலூா் சுங்கச்சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை அருகே கப்பலூா் சுங்கச்சாவடியில் திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி காரில் வந்தவா்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியா்களுக்கும் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக 2019-இல் தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் வந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சுட்டுவிட்டு தப்பியோடினா். இச்சம்பவம் தொடா்புடைய பலா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதாகியுள்ள சசிக்குமாா் என்பவரின் சகோதரி தனலட்சுமி, தனது சகோதரா் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை காணொலி மூலம் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது. ஆகையால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றனா். அப்போது மனுதாரா் தரப்பில், இந்த மனு குறித்து வாதம் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com