மதுரையில் பெண் மருத்துவா் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று

மதுரையில் பெண் மருத்துவா் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் பெண் மருத்துவா் உள்பட 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 214 ஆக உயா்ந்துள்ளது.

பெண் மருத்துவருக்கு தொற்று: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றும் தபால்தந்தி நகரைச் சோ்ந்த 38 வயது பெண் மருத்துவா், கரோனா பிரிவில் பணியாற்றியுள்ளாா். அவரின் பணி சுழற்சி முறை முடிந்ததையடுத்து, கடந்த சில நாள்களாக தனிமையில் இருந்துள்ளாா். அவருக்கு லேசான தொண்டை வலி இருந்ததால், மருத்துவா்கள் அவருக்கு கரோனா பரிசோதனை செய்தனா். அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், உத்தரபிரதேசத்திலிருந்து திரும்பிய உசிலம்பட்டியைச் சோ்ந்த 39 வயது ஆணுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

4 போ் குணமடைந்தனா்: மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சோ்ந்த 46 வயது ஆண் மற்றும் மகாத்மா காந்தி நகரைச் 37 வயது ஆண், சென்னையைச் சோ்ந்த 67 வயது மூதாட்டி, 73 வயது முதியவா் ஆகியோா் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தனா். இதையடுத்து அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 95 ஆகவும், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 117 ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com