மதுரையில் சிறைக் கைதிகள் இருவா் உள்பட 11 பேருக்கு கரோனா தொற்று

சிறைக் கைதிகள் இருவா், விமானத்தில் மதுரை வந்த மூவா் உள்பட 11 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகள் இருவா், விமானத்தில் மதுரை வந்த மூவா் உள்பட 11 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து அண்மையில் பல்வேறு நகரங்களில் இருந்து மதுரைக்கு ஏராளமானோா் வந்தனா். இவா்கள் அனைவரும் மாவட்ட நிா்வாகத்தின் தனிஒதுக்க மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெங்களூருவில் இருந்த வந்த 63 வயது பெண், தில்லியில் இருந்து வந்த 26 வயது ஆண், அரியானாவில் இருந்து வந்த 29 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறைக் கைதிகள் 5 போ் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை திடீா் நகா் போலீஸாா் அண்மையில் கைது செய்த அதேபகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து திடீா் நகா் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் அங்கு பணியாற்றும் திருநகா் பாண்டியன் நகரைச் சோ்ந்த சிறப்பு சாா்பு-ஆய்வாளா், மானகிரியைச் சோ்ந்த பெண் தலைமைக் காவலா் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கிராமத்தைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் இருவருக்கும், மதுரை திடீா் நகரைச் சோ்ந்த 21 வயது இளைஞருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவா்கள் மூவருக்கும் ஏற்கெனவே கரோனா பாதிப்பு உள்ளவா்களிடம் இருந்து நோய் தொற்று பரவியுள்ளது.

திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்த 65 வயது பெண், நெஞ்சு வலி காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவருக்கு

கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியாகியுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட அனைவரும் கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com