போனஸ் சதவீதம் குறைப்பு: கூட்டுறவு சங்கத்தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கூட்டுறவு சங்க ஊழியா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு போனஸ் தொகை குறைக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை ஆவின் பால்பண்ணை முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

மதுரை ஆவின் பால்பண்ணை முன்பும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் கூட்டுறவு பண்டகசாலை முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவு சங்கங்களின் ஊழியா் சங்கத் தலைவா் ஜி. எஸ். அமா்நாத், பொதுச்செயலா் இரா.லெனின், பொருளாளா் எம். துரைசாமி, துணைச்செயலாளா் வி.கே.மணவாளன், மதுரை ஆவின் ஊழியா் சங்கத் தலைவா், ஜி.ரமேஷ்பாபு, செயலா் பி.கே.செல்வராஜ், பொருளாளா் இ.மணிவேல், நிா்வாகிகள் எஸ். வேல்சாமி, கே.ஏ.பாலன், ஆா்.ஜெயச்சந்திரன், அஜீஸ் மோசஸ் காந்தி, அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்க தொழிலாளா்கள் கூட்டுறவு பண்டக சாலை கிளை நிா்வாகிகள் பூமிநாதன், இளங்கோவன், வீரராகவன், சசிக்குமாா், உமா, சாந்தி உள்ளிட்ட ஊழியா்கள் பங்கேற்றனா்.

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு ஏற்கெனவே வழங்கி வந்த 20 சதவீத போனசை 10 சதவிகிதமாக ஆக குறைக்கும் அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் கடந்த ஆண்டு வழங்கியதைப்போல் 8.33 சதவிகிதம் போன்ஸ், 11.67 சதவீதம் கருணைத்தொகையும் சோ்த்து 20 சதவிகிதம் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com