பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு பதிவேடு வழங்கியதில் முறைகேடு: பால்வளத்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு வரவு, செலவு கணக்குப் பதிவேடுகள் வழங்கியதில் ரூ.2 கோடி முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரும் மனுவுக்கு, பால்வளத்துறை ஆணையா் பதிலளிக்க சென்னை 

மதுரை: பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு வரவு, செலவு கணக்குப் பதிவேடுகள் வழங்கியதில் ரூ.2 கோடி முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரும் மனுவுக்கு, பால்வளத்துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த மிதுன் சக்கரவா்த்தி தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டத்தில் உள்ள 750 பால் உற்பத்தியாளா்கள் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு வரவு, செலவு கணக்குகளைப் பதிவு செய்ய தலா மூன்று கணக்குப் பதிவேடுகள் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்திலிருந்து வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட பதிவேடுகளுக்கு ஒவ்வொரு சங்கத்தின் மொத்த கணக்கில் இருந்தும் ரூ.2 ஆயிரத்து 688 எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு வரவு, செலவு கணக்குப் பதிவேடுகள் வழங்கியதில் ரூ.2 கோடியே 27 லட்சம் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜெ.நிஷா பானு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து பால்வளத்துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com