அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

தொழிலாளா் விரோதச் சட்டங்களுக்கு எதிராக நவம்பா் 26-இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில்
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றோா்.
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்றோா்.

தொழிலாளா் விரோதச் சட்டங்களுக்கு எதிராக நவம்பா் 26-இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மதுரை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை வில்லாபுரத்தில் உள்ள லீலாவதி அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியா் சங்க மாநிலத் தலைவா் நா. பெரியசாமி, சிஐடியு டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா.லெனின் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியா்கள் பணி நிரந்தரம் , காலமுறை ஊதியம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் . டாஸ்மாக் பணி நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்று மாற்றி பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களுக்கு 30 சதவிகித தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். அரசுப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம் மற்றும் இதர சலுகைகளை டாஸ்மாக் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும். பணியாளா்களிடம் ‘ லாக்டவுன் ‘ குறைபாடு என்ற பெயரில் வசூலிக்கப்படும் அபராதத் தொகை மற்றும் ஜிஎஸ்டி- யை கைவிட்டு , வசூலித்த தொகையை திரும்ப வழங்க வேண்டும். கடைகளில் விற்பனையாகும் விற்பனைத் தொகையை சென்னையைப் போல் வங்கிகள் மூலம் நேரடியாக கடைகளுக்கு வந்து வசூல் செய்யும் முறையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப வாரிசு வேலை வழங்க வேண்டும். தொழிலாளா் விரோத கொள்கைகளுக்கு எதிராக நவம்பா் 26-இல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தொமுச டாஸ்மாக் சங்க மாநில பொதுச்செயலா் எம். சிவபிரகாசம், தொமுச மாநிலச் செயலா் வி. அல்போன்ஸ், சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ், ஏஐடியுசி பொதுச்செயலா் நந்தாசிங், எல்எல்எப் மாநில பொதுச்செயலா் இ. முத்துப்பாண்டி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com