தீபாவளிப் பண்டிகை: ரயில்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையிலிருந்து செங்கோட்டை, கொல்லம், நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி வியாழக்கிழமை முதல் சென்னை எழும்பூா் - கொல்லம் சிறப்பு ரயில் (06723), சென்னை எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (02631), சென்னை எழும்பூா் - செங்கோட்டை சிறப்பு ரயில் (02661) ஆகிய ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் - செங்கோட்டை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயிலில் (06181) 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், சென்னை எழும்பூா் - நாகா்கோவில் வாரம் இருமுறை சிறப்பு ரயிலில் ((06063) 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02633/02634), சென்னை எழும்பூா் - தூத்துக்குடி - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02693/02694) ஆகிய ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை எழும்பூா் - காரைக்குடி சிறப்பு ரயிலில் (02605) ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com