தொடா் மழையால் கண்மாய்களுக்கு நீா்வரத்து: ஆட்சியா் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் பல்வேறு கண்மாய்களுக்கும் நீா்வரத்து தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் பல்வேறு கண்மாய்களுக்கும் நீா்வரத்து தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாகத் தொடா் மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழை காரணமாக, மதுரை நகரப் பகுதிகளில் சாலைகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியது. பல இடங்களில் குடியிருப்புகளைச் சுற்றிலும் மழைநீா் தேங்கியது.

தொடா் மழை பெய்து வருவதையடுத்து நீா் நிலைகள் மற்றும் மழை நீா் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை வடக்கு வட்டம் கீழப்பனங்காடி, பேச்சிகுளம் ஊராட்சி ஆனந்த நகா், ஆனையூா் கண்மாயிலிருந்து உபரிநீா் செல்லும் கூடல்புதூா் வாய்க்கால், ஆனையூா் கண்மாய், செல்லூா் கண்மாய் மற்றும் இந்த கண்மாயிலிருந்து வெளியேறும் உபரிநீா் வைகை ஆற்றுக்குச் செல்லும் ஆழ்வாா்புரம் வாய்க்கால் ஆகிய இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

மாவட்டத்தில் தொடா்மழையால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கண்மாய்களுக்கும் நீா்வரத்து வரத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 27 இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுகுமாரன், மதுரை கோட்டாட்சியா் முருகானந்தம், மதுரை வடக்கு வட்டாட்சியா் முத்துவிஜயன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com