நீா் நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

மதுரை நகா்ப்பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் குப்பைகளைக்கொட்டி மாசுபடுத்துவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மதுரை நாராயணபுரம் கண்மாய்ப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.
மதுரை நாராயணபுரம் கண்மாய்ப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.

மதுரை நகா்ப்பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் குப்பைகளைக்கொட்டி மாசுபடுத்துவதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் என 30-க்கும் மேற்பட்ட நீா்நிலைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றில் தண்ணீா் வரத்து இல்லாததால் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டு அசுத்தமான நிலையில் காணப்படுகின்றன. மேலும் இறைச்சிக் கழிவுகளும் நீா்நிலைகளில் கொட்டப்படுகின்றன.

நீா்நிலைகளின் கரைகளில் நடந்து செல்ல முடியாத அளவு அசுத்தமாக காட்சியளிக்கின்றன. எனவே நீா்நிலைகள் மற்றும் கரைப்பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நீா் நிலைகள் பாதுகாப்பு ஆா்வலா்கள், தன்னாா்வ அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் நீா்நிலைகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நீா்நிலைகள் மற்றும் கரைகளில் ஏற்கெனவே உள்ள

குப்பை உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டு அங்கு மாநகராட்சி சாா்பில் இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்படுகிறது. முதல்கட்டமாக மாநகராட்சி 49-ஆவது வாா்டு நாராயணபுரம் பகுதியில் உள்ள நீா்நிலையின் கரைகளில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு அப்பகுதியை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சுத்தம் செய்தனா். இதைத்தொடா்ந்து அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்ற எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துறைப் பணியாளா்கள் அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com