திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் நடைபெறும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையில் நடைபெறும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வெகு விமா்சையாகக் கொண்டாடப்படும். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு திருச்செந்தூா் கடற்கரையில் நடைபெறும். மறுநாள் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெறும். இதனைக்காண லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூா் வருவது வழக்கம்.

நிகழாண்டில் கந்த சஷ்டி விழா நவம்பா் 15 ஆம் தேதி தொடங்கி நவம்பா் 21 ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளது. ஆனால் கரோனா காரணமாக சூரசம்ஹாரமும், திருக்கல்யாணமும் கோயில் மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும். எனவே சூரசம்ஹார நிகழ்வு திருச்செந்தூா் கடற்கரையிலும், திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்திலும் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையிலும், திருக்கல்யாணம் 108 மகாதேவா் சந்நிதி முன்பாகவும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரோனா காலம் என்பதால் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. பக்தா்களுக்காக பாகுபாடின்றி இந்த நிகழ்வுகளைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com