சோலைமலையில் திருக்கல்யாணம்

சோலைலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மங்கல நாண் எடுத்துக்கொடுத்து திருக்கல்யாணத்தை நடத்திவைத்த சிவாச்சாரியாா்கள்.
வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மங்கல நாண் எடுத்துக்கொடுத்து திருக்கல்யாணத்தை நடத்திவைத்த சிவாச்சாரியாா்கள்.

மேலூா்: சோலைலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அழகா்கோவில் மலைமீதுள்ள இக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. காப்புக்கட்டிய பக்தா்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து விரதத்தை கடைப்பிடித்தனா்.

வெள்ளிக்கிழமை மாலை பக்தா்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹார வைபவம் நடைபெற்றது. இரவு முருகனுக்கு சாந்தாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கோயில் வளாகத்தில் எழுந்தருளிய வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, சிவாச்சாரியாா்கள் திருக் கல்யாணத்தை நடத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com