மதுரையில் மேலும் 33 பேருக்கு கரோனா

மதுரையில் மேலும் 33 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் மேலும் 33 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 1,655 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 33 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 30 போ் குணமடைந்தனா். அவா்களை, மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் தற்போது வரை 19,509 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 18,809 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 436 போ் உயிரிழந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 264 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com