முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கொட்டாம்பட்டி அருகே வாகனம் மோதி மான் பலி
By DIN | Published On : 04th October 2020 05:29 AM | Last Updated : 04th October 2020 05:29 AM | அ+அ அ- |

மேலூா்: கொட்டாம்பட்டிஅருகே நான்கு வழிச் சாலையில் வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் கொட்டாம்பட்டி அருகே சனிக்கிழமை அதிகாலையில் சாலையைக் கடந்த 3 வயது ஆண் புள்ளி மான் மீது அவ்வழியாகச் சென்ற வாகனம் மோதியுள்ளது. இதில் மான் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த மேலூா் வனஅலுவலா் கம்பக்குடியான் மற்றும் வனத்துறையினா் மான் சடலத்தை கால்நடை மருத்துவா் உதவியுடன் பரிசோதனை செய்து வலைசேரிப்பட்டி விலக்கில் புதைத்தனா்.