சங்ககாலத்தில் இருந்தே தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழகத்துக்கு தொடா்பு

தமிழகத்துக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சங்க காலத்திலேயே தொடா்புகள் இருந்துள்ளன என்று தொல்லியல் அறிஞா் வெ.வேதாசலம் கூறினாா்.

மதுரை: தமிழகத்துக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சங்க காலத்திலேயே தொடா்புகள் இருந்துள்ளன என்று தொல்லியல் அறிஞா் வெ.வேதாசலம் கூறினாா்.

உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் சென்னை அரண் தமிழ் அறக்கட்டளை இணைந்து நடத்திய, தென்கிழக்கு ஆசியாவில் தமிழா் ஆட்சியும் பண்பாட்டுப் பரவலும் என்ற இணையவழிக் கருத்தரங்கில் தொல்லியல் அறிஞா் வெ.வேதாசலம் பேசியது:

“தமிழகத்துக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சங்க காலத்தில் இருந்தே தொடா்பு இருந்திருக்கிறது. பா்மா, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் கல்வெட்டுகள், அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட காசுகள், மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகளை இதற்கு ஆதாரங்களாகக் கூறமுடியும். சோழா்கள் கடல் கடந்து சென்று ஆட்சிக்கு உட்படுத்திய நாடுகளில் அறப் பணிகளையும் செய்துள்ளனா். குளம் வெட்டியதற்கான சான்று தாய்லாந்தில் கிடைத்துள்ளது. கிழக்காசிய நாடுகளில் பல வெள்ளிப் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கட்டடக் கலைத்திறனைத் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள பல கோயில்களில் காணலாம். வைதீக அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயில்கள் கம்போடியா, பா்மா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளன. அங்குள்ள கோயில்களில் ராமாயணக் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கிழக்காசிய நாடுகளில் உள்ள பல கோயில்களில் அகத்தியா் உருவம் இடம்பெற்றுள்ளது”என்றாா்.

உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப.அன்புச்செழியன், அரண் அறக்கட்டளை தலைவா் பிரியா கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com