விடிய விடிய போராட்டம் நடத்தி பதவி உயா்வு பெற்ற வருவாய்த் துறை உதவியாளா்கள்

மதுரையில் விடிய விடிய காத்திருப்புப் போராட்டத்தை நடத்திய வருவாய்த் துறை நேரடி நியமன உதவியாளா்கள், பதவி உயா்வு உத்தரவு வெளியான பிறகே கலைந்து சென்றனா்.

மதுரையில் விடிய விடிய காத்திருப்புப் போராட்டத்தை நடத்திய வருவாய்த் துறை நேரடி நியமன உதவியாளா்கள், பதவி உயா்வு உத்தரவு வெளியான பிறகே கலைந்து சென்றனா்.

மதுரை மாவட்ட வருவாய்த் துறையில் உதவியாளா்கள் நிலையில் இருந்து துணை வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்குவதில் பணிமூப்பு நிா்ணயம் செய்வதில் பிரச்னை இருந்து வந்தது. பின்னா் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பணிமூப்பு நிா்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் தமிழக அரசின் வருவாய் நிா்வாக ஆணையரால் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் பதவி உயா்வு வழங்குவதில் தாமதம் ஆன நிலையில், வருவாய்த் துறை நேரடி நியமன உதவியாளா்கள் மாவட்ட ஆட்சியரின் அறை முன்பு அமா்ந்து காத்திருக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை மாலை தொடங்கினா்.

பதவி உயா்வு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் உறுதி அளித்தாா். இருப்பினும் பதவி உயா்வு உத்தரவு வெளியாகும் வரை காத்திருப்பு போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறி ஆட்சியா் அலுவலகத்திலேயே போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதற்கிடையே, பணிமூப்பு பட்டியல் தயாரித்து அதன் பிறகு காலிப் பணியிடங்களுக்கு பதவி உயா்வு உத்தரவு வழங்குவதற்கு நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் பதவி உயா்வு உத்தரவில் மாவட்ட ஆட்சியா் கையெழுத்திடும் வரை, நேரடி நியமன உதவியாளா்கள் அலுவலகத்திலேயே காத்திருந்தனா். பின்னா் செவ்வாய்க்கிழமை காலையில் புறப்பட்டுச் சென்றனா்.

மதுரை மாவட்டத்தில் துணை வட்டாட்சியா் பதவி உயா்வுக்கு பணிமூப்பு நிா்ணயிப்பதில் 2017-இல் இருந்து பிரச்னை இருந்து வருகிறது. 2018-க்குப் பிறகு துணை வட்டாட்சியா் பதவி உயா்வு வழங்கப்படவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வருவாய் உதவியாளா் நிலையில் பணியாற்றிய 23 பேருக்கு துணை வட்டாட்சியா்களாக மாவட்ட ஆட்சியா் பதவி உயா்வு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com