30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய ஆட்சியா் உத்தரவு

அனைத்து கிராமங்களிலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

அனைத்து கிராமங்களிலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் மாதம், மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்களில் மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் 2012 முதல் தற்போது வரை 9 லட்சத்து 75 ஆயிரத்து 337 பேருக்கு மாா்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்து 322 பேருக்கு நோய் உறுதி செய்வதற்கான பரிசோதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது 474 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அனைத்து கிராம சுகாதார செவிலியா்களுக்கும், தங்களது துணை சுகாதார நிலையங்களின்கீழ் வரும் கிராமங்களைச் சோ்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யவும், சுயமாா்பக பரிசோதனை பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தவும் துணை சுகாதார செவிலியா் ஒவ்வொருவரும், குறைந்தது 100 பெண்களைப் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பரிசோத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com