மதுரை மாவட்டத்தில் 9 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை

காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 9 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 9 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை வெளியிட்ட செய்தி: மத்திய அரசு மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை அனுசரிக்கும் வகையில் சுகாதாரப் பணியாளா்களின் நலன் காக்க, ஆரோக்கியமான சுகாதாரப் பணியாளா் திட்டத்தை அறிமுகப்படுத்தி அக்டோபா் மாதம் முழுவதும் நடத்துகிறது.

இத்திட்டத்தில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புனா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், அங்கனவாடிப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் என அனைத்து சுகாதாரப் பணியாளா்களுக்கும், சக்கரை, ரத்த அழுத்தம், மாா்பகப் புற்றுநோய், வாய்ப்புற்று நோய் மற்றும் கா்ப்பப்பை புற்றுநோய் போன்ற ஐந்து முக்கியமான நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதில் மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இத்திட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் மதுரை மாவட்டத்தில் நடக்கிறது. அதன்படி மாநகராட்சி பகுதியைச் சோ்ந்த 6 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளைச் சோ்ந்த 3 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்கள் என 9 ஆயிரம் போ் பயன் பெற உள்ளனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com