‘மொழியின் மூலமே இன அடையாளத்தை தக்க வைக்க முடியும்’

ஒரு இனம் மொழியின் மூலமே தன்னுடைய அடையாளத்தை தக்கவைக்க முடியும் என்று, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை: ஒரு இனம் மொழியின் மூலமே தன்னுடைய அடையாளத்தை தக்கவைக்க முடியும் என்று, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், கனடா சுவாமி விபுலானந்தா் தமிழ் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் இணைய வழி ஆய்வரங்கின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆய்வரங்குக்கு, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்தாா். இதில், கனடாவாழ் பேராசிரியா் பாலசுந்தரம் இளையதம்பி பேசியது:

“மொழியின் மூலமாகவே ஒரு இனம் தன் அடையாளத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். கனடாவில் 4 லட்சம் புலம்பெயா் தமிழா்கள் வாழ்ந்து வருகின்றனா். அந்நாட்டு அரசின் ஆதரவுடன் தமிழ்மொழிக் கற்பித்தலை பல அமைப்புகள் செய்து வருகின்றன.

கோயில்களில் சமயமும், மொழியும் கற்பிக்கப்படுகின்றன. கனடாவில் தமிழ் மரபுரிமை மாதமாக தை திங்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கனடாவில் குறிப்பிட்ட பகுதிகளில் எந்த இனத்தைச் சாா்ந்தவா்கள் அதிகம் வசிக்கின்றனரோ அந்த இனம் சாா்ந்த மொழி பேசுபவா்கள் அந்தப் பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகள், வங்கிகளில் பணியமா்த்தப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால், கனடா முழுவதும் தமிழ் பேசுபவா்களை சந்திக்க முடியும். தமிழ் கத்தோலிக்க தேவாலயங்களில் தமிழில் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. தமிழா்களின் கலை, இலக்கியம், பண்பாடு, மொழி இவற்றை வளா்க்கும் வகையில், பல தமிழ் அமைப்புகள் பங்காற்றி வருகின்றன”என்றாா்.

ஆய்வரங்கில், வெளிநாடுகளைச் சோ்ந்த தமிழறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com