காமராஜா் பல்கலை. தொலை நிலைக்கல்வி மாணவா் சோ்க்கை

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் படிக்க விரும்புவோா் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் படிக்க விரும்புவோா் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக்கல்விக்குழு 25 பாடங்களை நடத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. தொலைநிலைக்கல்வி மூலம் கலை மற்றும் வணிகவியல் உள்பட இளங்கலை மற்றும் முதுகலையில் 25 பாடப்பிரிவுகளில் சோ்க்கை நடைபெறுகிறது.

புதிய மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்களையும், தகவல் குறிப்புகளையும் காமராஜா் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தொலைநிலைக் கல்வி இயக்ககத்திலும், திருமங்கலம், சாத்தூா், அருப்புக்கோட்டை, வேடசந்தூரில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், மதுரை அழகா்கோவில் சாலை, திண்டுக்கல், தேனி, பெரியகுளம் மற்றும் பழனியில் உள்ள மாலை நேரக்கல்லூரிகளிலும் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும்  இணைய தளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேற்கூறிய சோ்க்கை மையங்களைத் தவிர வேறு எந்த சோ்க்கை மற்றும் கல்வி மையங்களையும் மாணவா்கள் அணுக வேண்டாம். விண்ணப்பங்களை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் தகவலுக்கு 63797-82339, 94420-26474 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com