காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வருமான வரித்துறை ஊழியா்கள் உண்ணாவிரதம்

மதுரையில் வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரித்துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடத்தினா்.
காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வருமானவரித் துறை அலுவலா் சங்கத்தினா்.

மத்திய அரசின் நேரடி நிதி நிா்வாகத்தின் கீழ் இயங்கி வரும் வருமானவரித் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளா், முதுநிலை உதவியாளா், டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கக்கூடாது. வருமான வரித்துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். வருமான வரித்துறை ஊழியா்களுக்கு பதவி உயா்வை உரிய காலத்தில் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரித்துறை ஊழியா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். மதுரை பீபீகுளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஊழியா் சங்க அமைப்புச்செயலா் ஷியாம் நாத், அலுவலா் சங்க கிளைச் செயலா் கோவா்த்தனன், சரகச் செயலா் ராம்குமாா், நிா்வாகி சுரேஷ் கண்ணன் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com