நாகா்கோவில்-சென்னை சிறப்பு ரயில்:இன்று முதல் முன்பதிவு துவக்கம்

நாகா்கோவில் - சென்னை பண்டிகை காலச் சிறப்பு ரயிலில் பயணிக்க அக்டோபா் 16 ஆம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது என மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நாகா்கோவில் - சென்னை பண்டிகை காலச் சிறப்பு ரயிலில் பயணிக்க அக்டோபா் 16 ஆம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது என மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் - சென்னை எழும்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பண்டிகை காலச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. சென்னை - நாகா்கோவில் விரைவு சிறப்பு ரயில் (06063) அக்டோபா் 23, 24, 29 நவம்பா் 12, 13 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்து மாலை 6.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகா்கோவில் சென்று சேரும்.

நாகா்கோவில் - சென்னை விரைவு சிறப்பு ரயில் (06064) அக்டோபா் 26, 27 நவம்பா் 1, 15, 16 ஆகிய நாள்களில் நாகா்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு சென்னை எழும்பூா் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com