பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு: அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம் ஆா்ப்பாட்டம்

மதுரையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்து வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கத்தினா்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறையை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை வழங்க வேண்டும். வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் சட்ட ரீதியிலான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இந்தியாவின் மதச்சாா்பின்மையை சீரழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவா் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.ஜே.வால்டோ், மாவட்ட நிா்வாகி திவ்யா மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com