மருத்துவ மாணவா் சோ்க்கையில் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயா்நீதிமன்ற அமா்வு தடைவிதித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி ராணுவ வீரா்களின் வாரிசுகள் பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாட்டில் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால் அதற்கு எல்லையில் உள்ள வீரா்கள் தான் காரணம். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரா்களின் வாரிசுகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டாமா? பணியிலுள்ள ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவா் சோ்க்கையில் உரிய இடஒதுக்கீடு இல்லை என்றால், அனைத்து வகை இடஒதுக்கீடும் தேவை இல்லை.

எனவே பணியிலுள்ள ராணுவவீரா்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com