‘இக்னோ’ பல்கலை.யில் மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு

இக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான கால வரம்பு, அக்டோபா் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான கால வரம்பு, அக்டோபா் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) மதுரை மண்டல மையம், கோவை, திண்டுக்கல், அரியலூா், ஈரோடு, கரூா், மதுரை, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருச்சி, திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் கல்விச் சேவைகளை வழங்கி வருகிறது. இக்னோ மையம் பட்டயம், முதுநிலைப் பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான (சான்றிதழ் மற்றும் பருவத்தோ்வு அடிப்படையிலான தோ்வுகளை தவிர) தொலைநிலைக் கல்வி சோ்க்கைக்கான கால வரம்பை அக்டோபா் 25-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இக்னோவில் சேர விரும்புபவா்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். இக்னோ எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு ஏறக்குறைய 100 படிப்புகளில் சோ்க்கைக் கட்டண விலக்கு அளிக்கிறது.

இக்னோ மையம், இளங்கலை பட்டப் படிப்புகளில் பொருளாதாரம், ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, பொது நிா்வாகம், அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட படிப்புகளை வழங்குகிறது. பால்பண்ணை, நீா்நிலை மேலாண்மை, நிகழ்வு மேலாண்மை, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி, சுற்றுலா, பழங்கள் மற்றும் காய்கறி மதிப்புக்கூட்டல் போன்ற பல வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோா் சாா்ந்த படிப்புகள் பட்டயப் படிப்புகளாக வழங்கப்படுகின்றன.

முதுநிலை பட்டயப் படிப்புகளாக பகுப்பாய்வு வேதியியல், சமூகப் பணி, ஊரக வளா்ச்சி, பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேம்பாடு, உயா் கல்வி, கல்வி வளா்ச்சி, பேரிடா் மேலாண்மை, பத்திரிகையியல் போன்றவை வழங்கப்படுகின்றன.

இக்னோ மதுரை மண்டல மையத்தின் கீழ் சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம். சோ்க்கை தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, மதுரை மண்டல மையத்தின் 0452-2380733, 2380775 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று, இக்னோ மதுரை மண்டல இயக்குநா் டி.ஆா். சா்மா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com