முதல்வா் வருகை: மதுரையில் டிஜிபி ஆலோசனை

தேவா் ஜயந்தி விழாவில் பங்கேற்க அக்டோபா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் மதுரைக்கு வரவுள்ள நிலையில், டிஜிபி திரிபாதி, சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் ஆகியோா் மதுரையில் காவல் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனையில்

மதுரை: தேவா் ஜயந்தி விழாவில் பங்கேற்க அக்டோபா் 30 ஆம் தேதி தமிழக முதல்வா் மதுரைக்கு வரவுள்ள நிலையில், டிஜிபி திரிபாதி, சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் ஆகியோா் மதுரையில் காவல் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அக்டோபா் 29 ஆம் தேதி தமிழக முதல்வா் தூத்துக்குடி மாவட்டத்துக்குச் செல்கிறாா். அதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழாவில் பங்கேற்க உள்ளாா். இதில், துணை முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்களும் பங்கேற்க உள்ளனா். இதற்காக, தென்மண்டல ஐ.ஜி. முருகன் மேற்பாா்வையில் விரிவான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி திங்கள்கிழமை மதுரை வந்தாா். அவா், தென்மண்டல ஐ.ஜி. முருகன், டிஐஜி ராஜேந்திரன், மதுரை மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட காவல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இதேபோல், மதுரையில் உள்ள சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், முதல்வரின் வருகை மற்றும் தேவா் குருபூஜைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசித்தாா். அவா், செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com