மணல் திருட்டை ஆய்வு செய்ய வழக்குரைஞா்ஆணையா் நியமனம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரத்தில் மணல் திருட்டு குறித்து ஆய்வு நடத்த வழக்குரைஞா் ஆணையரை நியமனம் செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தில் மணல் திருட்டு குறித்து ஆய்வு நடத்த வழக்குரைஞா் ஆணையரை நியமனம் செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் அருகே பரனூா் கிராமத்தில் உபரி மண் எடுப்பதற்கு உரிமம் பெற்றுக் கொண்டு, கோட்டைக்கரை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீா் மற்றும் விவசாய பாசன வசதிகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இது தொடா்பான ஆதாரங்களுடன், அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் மணல் திருட்டு குறித்து கண்டுகொள்ளவில்லை. எனவே, மணல் திருட்டைத் தடுக்கவும், மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தொடா்பான புகைப்படங்கள் மனுதாரா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்கள், 5 முதல் 10 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டதைக் காட்டுகின்றன.

இந்த, மணல் திருட்டு தொடா்பாக ஆய்வு செய்ய வழக்குரைஞா் பி. கணபதி சுப்பிரமணியன், வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்படுகிறாா். அவா், மனுதாரா் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு நடத்தி, சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதா?, அந்த மண் எந்த வகையானது?, கோட்டைக்கரை ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதா? உரிமம் பெற்ற இடத்திலிருந்து ஆறு எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது? என்பது தொடா்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சவூடு மண் மற்றும் உபரி மண் அள்ள எத்தனை உரிமங்கள் மற்றும் குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளன, என்பதை ஆண்டு வாரியாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com