பாசிப்பயறு கொள்முதல்:விவசாயிகள் பதிவு செய்யலாம்

பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளதால், பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.


மதுரை: பாசிப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளதால், பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் பாசிப் பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் அக்டோபா் 1 முதல் டிசம்பா் 28 ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. திருமங்கலம், உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிலோ ரூ.71.96-க்கு கொள்முதல் செய்யப்படும். ஆகவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த பாசிப் பயறை நன்கு உலா்த்தி, சுத்தம் செய்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வழங்கலாம். ஈரப்பதம், இதர பொருள்களின் கலப்பு, இதர தானியங்களின் கலப்பு, சேதமடைந்த பயறு, சுருங்கிய பயறு, வண்டு தாக்கிய பயறு ஆகியன தரப்பரிசோதனை செய்து கொள்முதலுக்கு அனுமதிக்கப்படும். இதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ஆகவே, விவசாயிகள் மேற்குறிப்பிட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இப்போதே பதிவு செய்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com